img-banner

Tamil Language


What Our Subject is About



ராபிள்ஸ் கல்வி நிலைய தமிழ்த்துறையின் பாடக்கலைத்திட்டம் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, கலைகள் முதலியவற்றை உள்ளடக்கியது. மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்து 21-ஆம் நூற்றாண்டு திறன்கள், விழுமியங்கள்  அடிப்படையில் மகிழ்வூட்டும் கற்றல் கற்பித்தல்  மூலம் வளர்க்கப்படுகின்றன.

 


What We Do To Develop Students' Interest/Abilities



எங்கள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரிகளுக்கிடையிலான விவாதப்போட்டி, பேச்சுப்போட்டி, எழுத்து சார்ந்த போட்டிகளான கட்டுரை, சிறுகதை முதலியவற்றில் கலந்துகொண்டு சிறக்க வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. மேலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் யோகக் கலை முதலியவை அவ்வப்போது கற்றுத்தரப்படுகின்றன; மாணவர்களிடையே தலைமைத்துவ பண்புகளை மெருகேற்றும் வகையில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளைப் பிற இன மாணவர்களோடு இணைந்து ஏற்பாடு செய்வதோடல்லாமல் ஆடல், பாடல், நாடகம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் சார்ந்த ‘சங்கமம்’ என்கிற கலைவிழாவும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.